தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை
றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல்நீதிமன்றம், இவருக்கு பிணை வழங்கியுள்ளது.
10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் இவரை, விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மணிலால் வைத்தியதிலக உத்தரவிட்டார்.
இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவில், அனுர சேனநாயக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி இதன்போது உத்தரவு வழங்கினார். மேலும், அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தாஜுதீனின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர், தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.