அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

🕔 June 1, 2017
ரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கிணங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அமைப்பாளர்களாள நியமிக்கப்பட்டவர்கள்,  தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனர்த்தத்துக்கு உள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.

Comments