துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்; அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க
🕔 June 1, 2017
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திஸாநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கப்பல் துறையில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடமிருந்து, தனக்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி பராக்கிரம திஸாநாயக இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார்.
துறைமுக அதிகார சபைத் தலைவர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் காணப்பட மாட்டாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, அர்ஜுன ரணதுங்க வகித்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு, மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
துறைமுகங்கள் அதிகார சபையின் முன்னைய தலைவராக, அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் சகோதரர் தம்மிக ரணதுங்க பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.