இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா

🕔 June 1, 2017

றாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எல்.எம். ஹனீபா, நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர சபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச். எம்.ஹமீம் தலைமை தாங்கினார்.

ஏறாவூர் பிரதேச செயலாளராக 05 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ஹனீபா, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.

ஏறாவூர் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின் போது, பிரதேச செயலாளர் ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டதோடு, நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் வை. ஹாஜா முகைதீன் வாழ்த்துப் பாவினை இயற்றி வாசித்தார். பிரதம முகாமைத்துவ உதவியாளர் –  பிரதேச செயலருக்கு பொன்னாடை போர்த்தினார். இதேவேளை, பிரதேச செயலாளர் ஹனீபாவவுக்கு நகர சபையின் செயலாளர் ஹமீம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

தொடர்பான செய்தி: ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

Comments