44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார்.
இதேவேளை, 08 மாணவர்களுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
காலநிலை அனர்த்தம் காரணமாக நாட்டில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.