டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

🕔 May 31, 2017

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.

கடந்த 24ஆம் திகதி மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், தேரர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments