புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 May 30, 2017

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே, அவர் இதனைக் கூறினார்.

பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் மேலும் தெரி­விக்­கையில்;

“தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடு­பட்­டுத்­தப்­பட்­டுள்­ளனர். பொலிஸாரின் விடு­மு­றைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தற்­போது வரையில் எந்தவொரு திருட்டுச் சம்­ப­வமும் பதிவாகவில்லை.

பொலிஸ் உயிர்­பா­து­காப்பு பிரிவு அதி­கா­ரிகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­களினால், தற்­போது வரையில் 123 உயிர்­களை காப்­பாற்ற முடிந்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் அநா­வ­சி­ய­மான முறையில், வெள்ள நிலை­மை­களை பார்வையிடும் நோக்கில் பட­கு­களில் வரு­கின்­ற­வர்­க­ளினால் நாம் பல சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேரிட்­டுள்­ளது.

தற்­போ­து­வ­ரையில் அவ்­வாறு பார்­வை ­யிட வருகை தந்­த­வர்­களில் 18 பேர் உயிரிழந்துள்­ளனர். அதனால் மேற்­படி அனர்த்­தங்­களை பார்­வை­யிடும் நோக்கில் அநா­வசி­ய­மாக பய­ணங்­களை மேற்­கொள்­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு மக்­களை அறி­வு­றுத்­து கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்