வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

🕔 May 18, 2017

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 05 மாடிக் கட்டடமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு காயமடைந்தவர்களில் 13 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், ​06பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டத்தின் மற்றொரு பகுதியும், இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments