எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

🕔 May 18, 2017
– எம்.ஐ. முபாறக் –

வெ
றுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன் வந்து கோடிஸ்வரராகின்றனர்.

அவ்வாறு ஓரளவு பணக்காரராக அரசியலுக்குள் நுழைந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே.

19 வயதில் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்த மஹிந்தானந்த இப்போது கோடிஸ்வரர்களில் ஒருவர்.

ஐந்து நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். கொழும்பு கின்ஸி வீதியில் 2 கோடி 70 லட்சம் ரூபா பெறுமதியான ஒரு வீடும் , கொஸ்வத்தையில் இன்னொரு வீடும் அவருக்கு உண்டு.

இங்கிலாந்தில் ஒரு வீடு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், அதை அவர் மறுக்கின்றார். 40 வருடங்களாக ஜப்பானில் பெரும் வர்த்தகராகக் கொடி கட்டிப் பறக்கும் அவருடைய சகோதரர் விஜயானந்த அலுத்கமவின் வீடுதான் அது எனக் கூறுகின்றார்.

இவ்வாறு சாதாரண நிலையில் இருந்து செல்வந்தராக உயர்ந்த இவர் அரசுக்கு வருடாந்தம் செலுத்தும் வருமான வரி எவ்வளவு தெரியுமா? 15 லட்சம் ரூபா. அதாவது, எம்பிப் பதவியால் அவர் வருடாந்தம் பெறுகின்ற சம்பளத்தை விடவும் இது அதிகமாகும் என்று, அவரே பெருமைப்பட்டுக்கொள்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்