பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு சென்றுள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் இன்னும் சில அமைச்சர்களும் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.