இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு

🕔 May 11, 2017

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையணியினர் இலங்கை வந்துள்ளனர்.

இதேவேளை, இந்திய விமானப்படையினர் எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் இரண்டினையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டிக்கோயா வைத்தியசாலையைத் திறந்து வைக்கும்பொருட்டு, கொழும்பிலிருந்து இந்தியப் பிரதமர் மோடி பயணம் செய்வதற்காகவே, மேற்படி இரண்டு விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மோடியின் பாதுகாப்புக்காக இலங்கை அரசாங்கம் 06 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வரும் மோடி, நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடு திரும்புவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்