முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

🕔 May 6, 2017

– க. கிஷாந்தன் –

ட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதியதில் மூவர் காயமடைந்தனர் என்று, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்