மோடி வரும்போது கறுப்புக் கொடிகளை பறக்க விடுங்கள்: விமல் வீரசன்ச கோரிக்கை

🕔 May 2, 2017

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தரும் போது கறுப்புக் கொடிகளைத் தொங்க விடுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டம் கொழும்பு – காலிமுகத் திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார்.

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடுவதன் மூலமாக, நாட்டை விற்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் வீரசன்ச கூறினார்.

“வெசாக்கினை பார்வையிடுவதற்கு மோடி இங்கு வரவில்லை. இலங்கையுடனான பொருளாதார ஒப்பந்தத்தை நிறைவுசெய்வதற்காவே அவர் வருகின்றார்” எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இலங்கைக்கான மோடியின் வருகையின்போது, ஒப்பந்தங்கள் எவையும் கைச்சாத்திடப்பட மாட்டாது என, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 12 முதல் 14ஆம் திகதி  வரை இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிகலந்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments