மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு
இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில், அந்தக் கட்சி 1832 பஸ்களை முன்பதிவு செய்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 1432 பஸ்களை பதிவு செய்துள்ளது. அந்தக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் 22 பஸ்களை மட்டுமே முன்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், ஜே.வி.பி.யினர் 209 பஸ்களை முன்பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கட்சி ஆகியவை தலா ஒவ்வொரு ரயில்களையும் முன் பதிவு செய்துள்ளனர்.