எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

🕔 April 30, 2017

னக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இருந்த போதும், ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, பொன்சேகாவுக்கு பாதுகாப்பு துறையில் உயர் பதவியை வழங்குவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டதாகவும், அது – ஜனாதிபதி பகிடியாக கூறியது எனவும், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருந்தமை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொன்சேகா; எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சர் என்பதால் அவரை மதிப்பதாகவும் அவர் அனைத்தையும் கேலியாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும், கூறினார்.

அத்துடன், “அமைச்சர் ஜோன் செனவிரத்ன எனது பதவி தொடர்பில் அச்சத்துடன் இருக்கின்றார். அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானர். எனக்கு வழங்குவதாக கூறப்பட்ட புதிய பதவியால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறார்” என்று பொன்சேகா குறிப்பிட்டார்.

இப்படியானவர்கள் கூறும் கதைகளை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை என்றும் சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்