பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி

🕔 April 25, 2017

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா என்றுஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கிழக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றபோதுஇ இறக்காமம் மணிக்கமடு மாயக்கல்லி மலையில் விகாரை அமைப்பது தொடர்பான அவசரப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியினை அவர் எழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

‘பௌத்தர்களுக்கு இந்த நாட்டில் எவ்வாறான மதஇ மொழி மற்றும் அரசியல் உரிமைகள் இருக்கின்றனவோஇ அவ்வாறான உரிமைகள் மற்ற சமூகங்கள் அல்லது இனங்களுக்கும் இருக்கிறதன என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?அவர்களிடம் உங்கள் விடயங்களை ஏன் திணிக்கின்றீர்கள்?

இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மதமாக பௌத்தம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்றுஇ இந்து மதத்தையும்இ இஸ்லாத்தையும்இ கிறிஸ்தவத்தினையும் பின்பற்றும் மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?

இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக சிங்களம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்றுஇ தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?

இந்த நாட்டை ஆழுகின்ற பெரும்பான்மைப் பலத்தை நீங்கள் கொண்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்றுஇ தற்போதைய இலங்கையின் சிக்கல் வாய்ந்த அரசியல் பின்னத்தில் சிறுபான்மை மக்களை புறந்தள்ளி அதிகாரத்திற்கு வர முடியாது என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?

இலங்கை பல்லின சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாடு என்பதற்குஇ இப்படிஇ நான் குறிப்பிட்டுக் காட்டியுள்ள விடயங்கள் போதிய சான்றுகளாக அமைகின்றன. அதனால்இ உங்களுக்கு இந்த நாட்டில் என்ன வகையான மதஇ மொழி மற்றம் அரசியல் உரிமைகள் இருக்கின்றனவோஇ அவ்வாறான உரிமைகள் மற்ற சமூகங்கள் அல்லது இனங்களுக்கும் இருக்கிறதன என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?அவர்களிடம் உங்கள் விடயங்களை ஏன் திணிக்கின்றீர்கள்?

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்றுஇ முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா?

இந்த நாடு கடந்தகால இன மோதல்களால் இழந்து நிற்கும் இழப்புக்களை நீங்கள் அறீவீர்களா? சர்வதேச பொறிக்குள் இந்த நாடு அகப்பட்டு மூச்சுத்திணறுவதை நீங்கள் அறிவீர்களா? நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்துள்ளதை நீங்கள் உணருவீர்களா?

இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் ஒரு பௌத்தர் கூட வசிக்காத நிலையில்; தமிழ்பேசும் சமூகங்கள் வாழுகின்ற இடத்தில்; குறிப்பாக முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பாரம்பரிய இடத்தில்இ விகாரையை அமைக்க முனைவது எந்த வகையில் நியாயம் என வினவ விரும்புகிறேன்.

பலாத்காரமாக மாற்றுக் காணியினைக் கொடுத்துவிட்டுஇ குறிப்பிட்ட காணியை சுவீகரித்து சட்டவிரோதக் கட்டிடத்தைக் கட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இலங்கையில் ஏன் இன்னொரு சமூகத்தின் மீது வெவ்வேறு வடிவிலான மத ரீதியிலான வன்முறைகளைத் திணிக்க முனைகிறீர்கள்? இலங்கை உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; எங்களுக்கும் செந்தமானது. நாங்கள் வந்தேறு குடி என்றால்; நீங்களும் வந்தேறு குடிதான். காலம் கூடிக் குறைந்தாலும் நீங்களும் வந்தேறு குடிதான். எனவேஇ இறக்காமத்தில் இடம்பெறும் சட்டமுரணான பலாத்கார பௌத்த திணிப்பும்இ விகாரை நிர்மானமும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய எதிரியாகச் சித்தரிக்கப்படும் கிறிஸ்தவ நாடான அமெரிக்காவில்இ அந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் அபாரமானது. முஸ்லிம்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படும் இந்துத்துவ ஆட்சி நடக்கும் இந்தியாவில்இ எவ்வளவு மத சுதந்திரத்தை அரசியல் சாசன ரீதியில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள் என்று பாருங்கள். முஸ்லிம் நாடான மலேசியாவில் முஸ்லிம்களல்லாதவர்கள் அனுபவிக்கும் மத சுதந்திரத்தை தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார்.

(மாகாண சபை உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்