சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை

🕔 April 20, 2017

சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது.

வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்திப்பு ஹனோயில் அமைந்துள்ள ஹோட்டல் மிலீயாவில் இடம் பெற்றது.

குறிப்பாக, சீன அரசாங்கம் இலங்கையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும்,எதிர்காலத்தில் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையின்  போது  பேசப்பட்டது.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி சீற்றத்தினையடுத்து இலங்கை மக்களின் வாழ்வாதார மற்றும் அவசர தேவைகளுக்காக சீன கூட்டுறவு சங்கம் உதவியதாக ,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் இதன்போது நினைவுபடுத்தினார்.

இந்த மனிதாபிமான உதவிகளுக்காக தமது நன்றியினையும், இலங்கை அரசாங்கத்தின் நன்றியினையும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை கூட்டுறவு ஆணையாளர் சுலைமான் லெப்பை நசீர்,தேசிய கூட்டுறவு கவுன்சிலின் செயலாளர் அசன்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொணடனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்