20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள்

🕔 April 19, 2017
பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.

இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 35லட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனது குடும்பத்தினரிடமிருந்து சுமார் 20லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது. மீதிப் பணத்தினை தனவந்தர்களிடமும், ஏனையவர்களிடமும் எதிர்பார்க்கின்றார்.

முஹைதீன் பிச்சை மாஜிதீன் – ஒரு பிள்ளையின் தந்தையாவார். இவரின் மனைவி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவராவார். மாஜிதீனின் பிள்ளை அங்கவீனமுற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக, இவர் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.

எனவே உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பெருமனங்கொண்டு உதவுவதற்கு முன்வாருங்கள்.

உதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம். அல்லது ஏ.எம். மாஹீர், கணக்கு இல. 8363987, இலங்கை வங்கி எனும் கணக்கு இலக்கத்தினூடாக தங்களின் உதவிகளை வழங்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்