தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

🕔 April 11, 2017

லங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அதன் தலைவர் எஸ்.எச்.எம். சல்மான் தலைமை தாங்கினார்.

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையானது,  இலங்கையின் பதவிநிலைசார் நிறைவேற்றுத்தர பதவிகளுள் ஒன்றாகும்.

மேற்படி நிகழ்வில் சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் பொறியியலாளர் யு. அம்ஸா, அதிபர் எம்.எம். ஹசன், அக்கரைப்பற்றுத் தொழினுட்பக் கல்லூரியின் அதிபர் ஏ. ஜனூர்டீன், திருகோணமலை தொழினுட்பக் கல்லூரியின் அதிபர் கே. ப்ரேமரஞ்சன், மட்டக்களப்பு தொழினுட்பக் கல்லூரியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களான கே. சுகுமாரன், வி. விமலராஜா, எம். சோமசூரியம், ரி.பாஸ்கரராஜா மற்றும் ஹாடி தொழினுட்பவியல் கல்லூரியின் மேலதிக பணிப்பாளர் எம்.எம். அப்துல் கையூம் ஆகியோரின் நீண்ட கால சேவைக்காக பாராட்டப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள மட்டக்களப்பு தொழினுட்பக் கல்லூரியின் அதிபர் ரி. ரவிச்சந்திரன் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை தொழினுட்பக் கல்விச் சேவையின் முதல் தர உத்தியோகத்தரும் ஹாடி தொழினுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளரும் தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய முதல்வருமான ஏ.எல். பதுர்தீன் நீண்ட காலம் சிறந்த சேவையாற்றி விரைவில் ஓய்வு பெறவுள்ளமையை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரின் சார்பிலும் நினைவுச் சின்னம், மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்