இரு வீடுகளில் தீ; சொத்துக்கள் நாசம், 15 பேர் தற்காலிகமாக இடம்பெயர்வு

🕔 April 8, 2017

– க. கிஷாந்தன் –

டிக்கோயா – சவுத் வனராஜ தோட்ட குடியிருப்பில் இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இரண்டு வீடுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், வீடுகளிலிருந்த உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த வீடுகளில் குடியிருந்த 02 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்த நிலையில்,  தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

எவ்வாறாயினும், இதன்போது யாரும் பாதிக்கப்படவில்லை. வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்