பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

🕔 April 7, 2017

– க. கிஷாந்தன் –

மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் குறித்த லொறி, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதிக்கு ஹைலண்ட் பால்மா – வெற்று பக்கட்களை கொண்டு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்த நிலையில், சாரதி காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

Comments