முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

🕔 March 30, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தமையினையடுத்து, உண்ணா விரதப் போராட்டத்தினை விமல் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல், வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உண்ணா விரதமிருந்தமையினால் சுகயீனம் அடைந்க விமல் வீரவன்ச, நேற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் நிலை மோசமடைந்தமையினால், நேற்று புதன்கிழமை அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்