மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

🕔 March 29, 2017

– க. கிஷாந்தன் –

டப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

ரப்பான தோட்ட மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே, இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்பன்ன திம்புலன பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே, இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்