ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத்

🕔 July 10, 2015
Rishad - 032– அஸ்ரப் ஏ. சமத் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஜ.தே.கட்சியியில் இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான, வேட்புமனுவில் – அமைச்சர் றிசாத்  இன்று வெள்ளிக்கிழமை சிறிகொத்தவில் வைத்து கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கட்சியின் வன்னி அமைப்பாளருமான ஹூனைஸ் பாருக் – ஐ.தே.கட்சி சார்பாக வன்னியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென, சிறிக்கொத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமைச்சா் றிசாத்தின் கட்சியைச் சேர்ந்த இன்னுமொரு வேட்பாளருக்கும், ஜ.தே.கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது இவ்வாறிருக்க, ஜ.தே.கட்சியில் தனக்கு வேட்புமனு வழங்கப்படா விட்டால், தான் சுயேட்சையாக வன்னியில் களமிறங்கப் போவதாக, ஹூனைஸ் பாறுக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்