மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

🕔 March 29, 2017

– அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார்.

மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக் கூறப்படும் பாரிய குற்றங்கள் தொடர்பில், அண்மைக்காலமாக, அன்சில் பகிரங்கமாக பேசிவரும் நிலையிலேயே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் அரசியல் விவகாரச் செயலாளராக அன்சில் வகித்த பதவியிலிருந்தும் அவரை நீக்குவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்