மதகுருமாருக்கு வாழ்வாதார உதவி; றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்

🕔 March 26, 2017
– ஏ.ஆர்.ஏ. ரஹீம் –

யற்கை பசளைகளைக் கொண்டு மனிதர்கள் உண்பதற்கு உகந்த வகையில் செய்யப்படும் விவசாயத் திட்டத்தினை ஊக்குவிப்பதற்காக, அவ்வகையான விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு உதவிகளை வழங்க வேண்டிது அவசியமாகும் என்று, வட மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடா றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மதகுருமாரின் வாழ்வாதாரமான விவசாயத் தேவைக்குரிய  இயந்திரங்களை, வட மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடா றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.

றிப்கான் பதியுதீனின் மாகாணசபை நிதியொதுக்கீட்டின் கீழ், இந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வாதாரத்தினைக் கொண்டு செல்வோருக்கு  என்னால் இயன்ற உதவியை செய்வதில் நான் சந்தோஷமடைகின்றேன். அத்தோடு எமது பிரதேசங்கள் விவசாய நிலங்கள் கூடிய மண்வளமிக்கவையாகும். இவ்வாறான வளம் வீணடிக்கப்படுவதை விட , அதன்மூலம் எமது வாழ்க்கையை  கொண்டு செல்வது வரவேற்கத்தக்கதாகும்.

நம் உடலில் சக்தி இருக்கும் வரையில் எதோ ஒரு தொழிலை நாம் செய்ய வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி மற்றவர்களிடம் தங்கி வாழும் செயற்பாட்டை நாம் இல்லாமல் ஒழிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்