உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு
🕔 March 26, 2017
– அஷ்றப். ஏ சமத் –
‘உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில், காலம் சென்ற பேராசிரியா் ம.மு. உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்கிசையில் உள்ள கற்கை நிலையத்தில் இடம்பெற்றது.
கருத்தரங்கின் அங்குரார்பண நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம் பெற்றது. தென்கிகிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா் எம்.எம். நாஜிம் தொடக்கவுரையை நிகழ்த்தினாா்.
இந் நிகழ்வில் தமிழக சட்டசபை உறுப்பினர் குத்துாஸ் ஹசன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
மேற்படி கருத்தரங்கின் ஞாபகாா்த்த சின்னத்தினை போராசிரியர் உவைசின் மூத்த புதல்வரிடம், தென்கிழக்கு பல்கலைக்கழகக உபவேந்தர் நாஜிம் வழங்கினார்.
கருத்தரங்களின் மையப்பொருள் உரையை பேராசிரியா் எம்.ஏ. நுஹ்மான் நிகழ்த்தினார்.
மேற்படி கருத்தரங்கின் 02 ஆம் நிகழ்வுக்கு பேராசிரியா் எஸ். தில்லைநாதன் தலைமை தாங்கினார். இதில் இஸ்லாமிய தமிழ் இலங்கிய வரலாறு எனற தலைப்பில் பேராசிரியா் பே. யோகராஜா உரை நிகழ்த்தினாா்.
கருத்தரங்கின் 03ஆம் பகுதி, ஜாமியா நளீமியா பணிப்பாளா் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய தமிழ் இலக்கிய உரையை பேராசிரியர் அ. சன்முகதாஸ் நிகழ்த்த, இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுரையை ஜாமிய நளிமீயா முதல் நிலை விரிவுரையாளா் அஷ்ஷேக் எஸ்.ஏ. பழில் பேராசிரியா் எம். ஏ அனஸ் ஆகியோர் நிகழ்த்தினாா்கள்.
பேராசிரியா் உவைஸ்ப ற்றிய நுால் வெளியீடு பேராரிசிரியா் எம். ஏ நுஹ்மான் மற்றும் பேராசிரியா் எஸ். தில்லைநாதன் ஆகியோா் தலைமையில நடைபெற்றது. நுாலின் பிரதிகளும் பேராசிரியரின் குடும்ப அங்கத்தவா்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ மாணவிகள், பேராசிரியா்கள், பேராசிரியா் உவைசின் குடும்ப அங்கத்தவா்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டனர்.