அரசியல்வாதி வீட்டின் ரகசிய பங்கரில் கஞ்சா; கலால் அதிகாரிகள் கைப்பற்றினர்

🕔 March 23, 2017

ரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

எம்பிலிபிட்டிய – பனாமுர பகுதியிலுள்ள முன்னாளர் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டில் ரகசியமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த பங்கரிலிருந்தே மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கஞ்சாவை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியதோடு, சந்தேக நபரான முன்னாள் பிரதேச செயலாளரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன், கைது செய்யப்பட்ட நபர், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

Comments