தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

🕔 March 22, 2017

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டதை அடுத்து இல்லாதொழிந்தது.

எனினும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தேர்தல் ஆணைக்குழு தொடர்பான செய்திகள், தகவல்களை வெளியிடுகையில் தொடர்ந்தும் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களைப் பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 49, 03 (ஈ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமறுகால ஏற்பாட்டிற்கமைய, இதுவரை ஏதேனும் ஓர் ஆவணத்தில் “தேர்தல்கள் ஆணையாளர்” மற்றும் ‘தேர்தல்கள் திணைக்களம்’ எனும் சொற்பதம் காணப்படுகின்ற ஒவ்வோர் இடத்திலும் அதற்குப் பதிலாக ‘தேர்தல் ஆணைக்குழு’ எனும் சொற்பதம் பதிலீடு செய்யப்பட வேண்டும்.

Comments