நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது
வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி சட்டத் திருத்தத்துக்கான பிரேரணையினை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்ததாகவும், அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.