மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு

🕔 July 10, 2015
– அஸ்ரப் ஏ. சமத் –Johnston - 01

முன்னாள் அமைச்சா்களான  ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு,  ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.

இவா்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டாா்கள் எனவும், இவா்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று இவா்கள் வேட்பு மனுவில் கைச்சாா்த்திட்டுள்ளனா்.

சஜின்வாஸ் குணவா்த்தன, மேர்வின் சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கு மட்டுமே, ஐ.ம.சு.முன்னணியில் வேட்புமனு வழங்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்