பதுளையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று; ரஷ்ய பெண்கள் பரப்பியதாகச் சந்தேகம்
எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு, ரஷ்ய பெண்கள் இருவரின் மூலமாக எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும், எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
பதுளை – எல்ல சுற்றுலா பகுதிக்கு கடந் சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த பெண்கள் இருவர் மூலமாகவே, மேற்படி இளைஞர்கள் எச்.ஐ.வி. வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியின் சுற்று சூழலை ஆராய்வதற்காக வருகைத்தந்துள்ளதாக கூறி, மேற்படி பெண்கள் இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
இதன்போது குறித்த இரு பெண்களும் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் பாியல் ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் 27 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் திருமணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேற்படி இளைஞர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றினை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ரஸ்ய பெண்கள், இலங்கையை விட்டு சென்றுள்ளனர்.