ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகர்க்கும் தனிக்கை’ நூல் வெளியீடு
🕔 March 18, 2017



தமிழ் மிரா் பத்திரிகையின் பிரதம ஆசிரியா் ஏ.பி. மதனின் ‘தணிக்கை தகா்க்கும் தனிக்கை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளா் ந. வித்தியாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு நுாலினை வெளியிட்டு வைத்தாா்.
தமிழ் மிரா் பத்திரிகையில் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை எழுதிய 100 ஆசிரியர் தலையங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.
இந் நிகழ்வில் அதிதிகளாக எதிா்கட்சித் தலைவர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், அமைச்சர்களா மனோகணேசன் மற்றும் ரஊப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

Comments

