ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

🕔 July 9, 2015

Mahinda - 022முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிடும் பொருட்டு, விமல் வீரவன்சவும் இன்றைய தினம் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆயினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான – சஜின்வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா, மேர்வின் சில்வா மற்றும் சரன குணவர்த்த ஆகியோருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடுவதற்கான சந்தப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்