டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர்

🕔 March 10, 2017
பேஸ்புக் நிறுவுனர் மார்க்  ஷூக்கர் பெர்க், டொக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்காவின் ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் மார்க்  ஷூக்கர் பெர்க். மிகக்  குறுகிய காலத்திற்குள் பேஸ்புக் என்னும் வலைத்தளம்  மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.  அத்தோடு, உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும்  இடம் பிடித்திருக்கிறார்.

சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு  அமெரிக்காவில் உள்ள ஹோர்வட் பல்கலைக்கழகத்தில் (Horward University) மார்க் படித்து வந்தார். ஆயினும், பேஸ்புக் ஆரம்பித்த பின்னர்  அவரால் படிப்பை உரிய முறையில்  தொடர முடியவில்லை. எனவே, படிப்பை அரைவாசியிலேயே நிறுத்திவிட்டார்.
பேஸ்புக் உலகளாவிய அளவில் மிகப் பிரபல்யமடைந்து, மார்க் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதிலும் பல்கலைக் கழகப் பட்டமொன்று தனக்குக் கிடைக்காமற் போய்விட்டதே என்ற வருத்தம் அவருக்குள் இருந்தே வந்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது அவருடைய தொழில் சாதனைக்காக ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மார்க் மிக்க மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்