சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம்
– றிசாத் ஏ காதர் –
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் ஆலோசகராக டொக்டர் கே.எல். நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை, துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமையாகும்.
மேற்படி நியமனத்துக்கிணங்க, இம் மாதம் 03 ஆம் திகதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு, மேற்படி அமைச்சின் ஆலோசகராக டொக்டர் நக்பர் பதவி வகிப்பார்.
சுகாதார அமைச்சின்ஆலோசகர்களாக அமைச்சரினால் பத்து பேர் நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் கே.எல்.நக்பர் – நிந்தாவூர் ஆராய்ச்சி ஆயுர்வேத வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதுடன், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.