அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில்

🕔 March 1, 2017

– முன்ஸிப் அஹமட் –

மு
.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது.

மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி பதவி வகித்த போது, அந்தப் பதவியின் அதிகாரங்களை சூழ்ச்சிகரமாகப் பறித்தெடுத்தமை, முழு அதிகரம் கொண்ட செயலாளர் பதவி மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றினை வழங்குவதாக கூறி, ஹசனலியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஏமாற்றியியமை தொடர்பில், மக்களுக்கு ஹசனலி  தெளிவுபடுத்தவுள்ளார்.

மேலும், முஸ்லிம் சமூகத்துக்கு மு.கா. தலைவர் இழைத்த அநீதிகள் குறித்தும், மேற்படி பொதுக்கூட்டத்தில் ஹசனலி அம்பலப்படுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹசனலியை ரஊப் ஹக்கீம் நம்ப வைத்து ஏமாற்றியமையினை அடுத்து, உம்ரா கடமைக்காக மக்கா சென்றிருந்த ஹசனலி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான முன்னோடி கலந்துரையாடலொன்று, இன்று புதக்கிழமை நிந்தவூரில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான பிரசாரத்தினை, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி, தனது சொந்த ஊரிலிருந்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்