அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு
🕔 February 28, 2017



அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஒரு மணி நேர அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளடங்கலாக 0 6 கோரிக்கையை முன்வைத்து இவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடடனர்.
இதேவேளை, ‘இரண்டாம் மொழி தேர்ச்சிக்கான விதிமுறையை நிறுத்து’, ‘சுகாதார நிருவாக்கப் பதவிகளுக்கு எமது தொழில்களுக்கும் வாய்ப்பு வழங்கு’, என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும், பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
மேற்படி அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பின் காரணமாக, வைத்திய சாலையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.



Comments

