சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி
🕔 February 27, 2017
களுத்துறை சிலைச்சாலை பஸ் வண்டியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பதாள உலகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
கடுவல நீதிமன்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது, இன்று திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் வந்த அடையாளம் தெரியாத குழுவினர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதிகளை சிலைச்சாலையிலிருந்து அழைத்துக் கொண்டு, நீதிமன்றம் செல்லும் வழியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மேற்படி சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் ஒருவர் களுத்துறை ஆதார வைத்தியசாலையிலும், மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்தனர் எனத் தெரியவருகிறது..