பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

🕔 July 9, 2015
Prasanna+Mahinda - 01– அஸ்ரப் ஏ. சமத் –

.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கியமை தொடர்பில், தனது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக, முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவின் பெயா் – மீண்டும் வேட்பாளர் பட்டிலில் உள்வாங்கப்படல் வேண்டுமென்றும், இல்லாவிட்டால் தனது அணியினருடன், தேர்தலில் வேறாகக் களமிறங்கப் போவதாகவும், மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா்.

பிரசன்ன ரணதுங்கவின் இரு சகோதரா்கள், ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்லுக்காக களமிறங்குகின்றனர். இந்த நிலையில்,  பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக பதவி வகிப்பதால், அவருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை சந்திரிக்கா வழங்க மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்திலிருந்து, ஒரே மாவட்டத்தில் மூன்று போ் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையின் பேரிலேயே, பிரசன்னவின் பெயரை சந்திரிக்கா குமாரதுங்க நீங்கியிருந்ததாகச் சொல்லப்பகிறது.

ஆனாலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ராஜபக்ஷவின் வலது கை போன்று பிரசன்ன ரணதுங்க செயல்படுபவா் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்லேயே, பிரசன்னவை – வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கும்மாறு மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால்  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளா் சுசில் பிரேமஜெயந்த்தையும் இணைத்துக் கொண்டு, தனது அணியினருடன் தேர்தலில் தனியாகக் களமிறங்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்