அஷ்ரஃப் மரணம் எப்படி நிகழ்ந்தது; பசீரின் முயற்சிக்கு, கிடைத்தது பதில்

🕔 February 21, 2017

– அஹமட் –

தகவல் அறியும் உரிமைச் சட்த்தின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான, தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, மு.கா.வின் முன்னாள் தவிசாளரும், முன்னைநாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கிடைத்துள்ளது.

அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினைக் கோரி, பசீர் விடுத்திருந்த விண்ணப்பக் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், அது தொடர்பான தமது தீர்மானத்தினை 14 நாட்களுக்குள் அனுப்பி வைப்பதாகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரி.ரி. உபுல்மாலி, 17 பெப்ரவரி 2017 எனும் திகதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் பசீருக்கு அறிவித்துள்ளார்.

அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட ‘நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர தனி நபர் ஆணைக்குழு’வினுடைய அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு பசீர் சேகுதாவூத் கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மேற்படி அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்க வேண்டும் என்றும், தனது கடிதத்தில் பசீர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பசீர் அனுப்பி வைத்த கோரிக்கை கடிதம் கிடைக்கப் பெற்றமையினை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரி.ரி. உபுல்மாலி, பசீருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் பசீரின் கோரிக்கை தொடர்பில், தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்