பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார்

🕔 February 17, 2017

Milk - 011– க. கிஷாந்தன் –

சுப்பாலை ஆற்றில் கலந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்திலுள்ள பாலினையே, அதன் உரிமையாளர் இவ்வாறு ஆற்றில் கலந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற, மேற்படி நபரின் பால் சேகரிப்பு நிலையத்துக்கு, இப்பகுதியை சேர்ந்த தோட்டப்பகுதி மற்றும் கிராம மக்கள் பசுப்பாலை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை – பால் சேகரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள டிக்கோயா ஆற்றில் பால் கலக்கப்பட்டுதை மக்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து,  ஆற்றில் பால் கலக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவத்தை அறிவதற்காக விரைந்த ஹட்டன் பொலிஸார், பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது பால் சேகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பால், தாங்கி ஒன்றிலிருந்து வெளியாகி, ஆற்று நீரில் கலந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இருந்தும் சந்தேகம் கொண்ட பொலிஸார், உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதேவேளை, பால் சேகரிப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் மாத்திரமே கடமையில் இருந்ததாகவும் உரிமையாளர் கூறியுள்ளார்.

சுமார் 2000 லீற்றர் பால், இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆற்றில் பால் கலந்தமைக்குரிய சரியான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், சேகரிப்பு உரிமையாளர், பாலை ஆற்றில் கலக்க செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.Milk - 033

 

Comments