பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
– யூ.எல்.எம். றியாஸ் –
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த நிதியிலிருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள், நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் திறமைகளை மேம்படுத்தி, தேசிய ரீதியில் பிரகாசிக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அமைய, இந்த விளையாட்டு உபகரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒருங்கமைப்பின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஐ.எல்.எம். இப்ராஹீம் தலைமையில், நிந்தவூர் அல் – மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இவ் வைபவம் இடம்பெற்றது.
இதன்போது, தேசிய ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்ற, நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், நினைவுச் சின்னம்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் – விளையாட்டு துறை சார் உத்தியோகத்தர்கள் கல்விமான்கள் , அரசியற் பிரமுகர்கள் மற்றும் உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.