தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு, கம்பன் விழாவில் கௌரவம்

🕔 February 13, 2017
– அஷ்ரப். ஏ. சமத் –
தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். எம். நாஜீம், கொழும்பு கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். ‘வளமான துனைவேந்தன்’ வித்துவ சிரோமனி பொன்னம்லப்பிள்ளை விருது இதன்போது இவருக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட பலர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இரண்டு கலாநிதி பட்டங்கள் பெற்ற மரிய. சேவியா் அடிகளாா், பெரியசாமி சுந்தரலிங்கம், யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ரி. சத்தியமூர்த்தி,  சைவப்புலவா் மு. திருஞானசம்பந்தப்பிள்ளை,  சங்கீத பூசணம் நா.வி.மு. நவரட்னம், கலாபூசணம் தமிழ்மணி, ராவய பத்திரிகை ஸ்தாபகா் விக்டர் ஐவன்,  எழுத்தாளா் அருள் சுப்ரமணியம்  ஆகியோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, தமிழ் நாட்டைச் சேர்ந்த மூத்த தமிழறிஞா் சொலமன் பாப்பையாவுக்கும் கம்பன் புகழ் விருது வழங்கப்பட்டது.

கம்பன் விழா இறுதி நாள் நிகழ்வில்,  கம்பன் கழக தலைவா் ஓய்வுபெற்ற நீதியரசர் தெ.  ஈஸ்வரன், எதிா்கட்சித் தலைவா் இரா. சம்பந்தன், அமைச்சா் டி.எம். சுவாமி நாதன் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவா்த்தன ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Comments