தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்
தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை உயர்மட்டத்தில் இருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய மெக்சிகோ 136 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சேர்பியா 135 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 131 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியா 128 புள்ளிகளுடன் 05வது இடத்தில் உள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், இம்மாதம் 03ஆம் திகதியே அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.