06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி
🕔 February 10, 2017


– க.கிஷாந்தன் –
டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த ராஜரட்ணம் (55 வயது) என தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் இடம்பெறவிருந்த திருவிழாவை காண்பதற்காக, டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வேளையில், முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 06 பேர் பயணித்திருந்தனர். 04 ஆண்கள் ஒரு சிறுவன் மற்றும் பெண் ஒருவர் அடங்குவர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments

