மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை

🕔 February 8, 2017

Chathurika - 011னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே, தான் ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 1989 ஆண்டு நாடாளுமன்றம் சென்ற சந்திரசிறி சூரியஆராச்சி , 2006ஆம் ஆண்டு வரை அந்தக் கட்சியில் இணைந்திருந்தார்.

ஆயினும், 2006ஆம் ஆண்டு ஐ.ம.சு.கூட்டமைப்பில் சந்திரசிறி சூரியஆராச்சி இணைந்தார். இதன் பின்னர் இவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளையும் வகித்திருந்தார்.

இந்த நிலையில் சந்திரசிறி சூரியஆராச்சியின் ராஜிநாமாவை அடுத்து, மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் ஏற்பட்டு வெற்றிடத்துக்கே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்