சக்தி செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது

🕔 February 6, 2017

News 1st - 01க்தி தொலைக்காட்சியில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெறும் ‘நியுஸ் பெஸ்ட்’ 8.00 மணி பிரதான செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகம் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகிறது.

மேற்படி புத்தகம் வெளியாகி அரசியல் அரங்கில், பெரும் அதிர்வுகளை ஏற்படித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அஹடம் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக, ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகத்தில் ஆவணங்களுடன் விபரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த புத்தகம் தொடர்பில், அவற்றிலுள்ள ஆதாரங்களை முன்வைத்து வெளியிடப்படும் விபரங்களை, சக்தி தொலைக்காட்சியில் இன்றிரவு 8.00 மணி  செய்தியறிக்கையில் காண முடியும்.

Comments