முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

🕔 July 8, 2015
Mujibur rahman - 02

க்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்கிழமை, அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதன் மூலம் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

1989 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளை முஜிபுர் ரஹ்மான் ஆரம்பித்திருந்தார். அப்போது ஜே.வி.பி. கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்களுக்காக, நாடு தழுவிய ரீதியில் சென்று குரலெலுப்பினார். பின்னர் 1990 ஆம் ஆண்டுகளில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, கொழும்பில் பல்வேறு கண்டன ஆரப்பாட்டங்களை நடத்தினார். 90 களின் கடைசி பகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை உறுவாக்கி, அதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

மாவனெல்லையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலின்போது முன்னெடுத்த ஹர்த்தால் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக, முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன் பின்னர் இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட அராஜகங்கள் தொடர்பில் இவர் பல கண்டன பேரணிகள் நடத்தியமை குறித்து,  சில விசமிகளால் அந்நாட்டுக்கு தகவலளிக்கப்பட்டமையால், தீவிரவாதி என குற்றம் சுமத்தப்பட்டு – முஜிபுர் ரஹ்மான அங்கு கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற விசாரணையில் நிரபராதி என நிரூபிக்ப்பட்டதையடுத்து விடுதலையானார்.

இந்நிலையில்,  2007 ஆம் ஆண்டு நாடு திரும்பிய முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார். பின்னர், 2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு 24 ஆயிரத்துக்கும் மேல் வக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினரானார். மஹிந்த ராஜபக்ஷ அரசினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்களை கண்டித்து துணிவுடன் உரிமை குரலெழுப்பி வந்தார்.

கொழும்பின் சில சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் தடை ஏற்படுத்தப்பட்டபோது, அதனை வெ ளிச்சத்துக்கு கொண்டு வந்த முஜிபுர் ரஹ்மான் – அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு, முஸ்லிம்களின் உரிமைகளும் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஹலால் விவகாரத்துக்கு தடை ஏற்பட்டபோது – அழுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற பகுதிகளில் நாடு தழுவிய ரீதியில் ஹர்தாலை நடத்தினார். இதன் காரணமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது சர்வதேச தீவரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக, இனவாதிகளால் முத்திரை குத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், கோடபாயவின் ஆசீர்வாதத்துடன் மத்தியில் கொழும்பில் கெசினோ நிலையங்கள் அமைக்க முற்பட்டபோதும், கொழும்பு முஸ்லிம்களின் வீடுடைப்பு, வியாபார நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றும் பல உரிமை மீறல் நடவடிக்கைகளின்போதும் – துணிச்சலாக வீதியில் இறங்கி, தொடர்ச்சியாக அவர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவந்தார்.

பொது பலசேனா மற்றும் இனவாத அமைப்புகளின் செயற்பாடுகளை கண்டித்ததோடு, முஸ்லிம் சமூகம் சார்பில் சிங்கய தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக முஸ்லிம் சமூகம் சார்பாக – இவர் குரலெழுப்பினார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று – மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையில் தெரிவானார். இந்நிலையிலேயே இவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்