அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து

🕔 February 4, 2017

Accident - Car -01– ஹனீக் –

ட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவில் இன்று சனிக்கிழமை கார் ஒன்று விபத்துக்குள்ளாது. வீதி வளைவில் திரும்ப வேண்டிய குறித்த கார், நேராகப் பயணித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது.

வீதியை விட்டு விலகிய வாகனம், அங்கிருந்த வீதிச் சமிக்ஞை தூண் மற்றும் வீடொன்றின் சுற்று மதில் ஆகியவற்றினை மோதி உடைத்துள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த போதே, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில் இந்தக் கார் விபத்துக்குள்ளானது. ஆயினும், வாகனத்தில் பயணித்தோர் தெய்வாதீனமாக ஆபத்தின்றித் தப்பியுள்ளனர்.

அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவில் கடந்த சில காலங்களுக்கு முன்னர் அடிக்கடி வாகன விபத்துக்கள் இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக, வீதியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பாதுகாப்பு சமிக்ஞைகளும் இடப்பட்டிருந்தன.

இதனால், இந்த வளைவில் வாகன விபத்துக்கள் குறைவடைந்திருந்தன. இந்த நிலையிலேயே, இன்று மீனோடைக்கட்டு வளைவில், இந்த விபத்து இடம்பெற்றது.Accident - Car -03 Accident - Car -02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்